Sunday, October 14, 2007

பாரதிபுரம் அமர்ந்தவள்

நெமிலிச்சேரி மெயின்ரோடு, பாரதிபுரம்
அருள்மிகு ஸ்றீ முத்துமாரியம்மன் ஆலய
18-ஆம் ஆண்டு ஆடி மாத திருவிழா
அழைப்பிதழில் இருந்த செய்யுளில்
'முத்துமாரி, முப்பெருந்தேவி,
சங்கரி, பராசக்தி' என்ற பெயர்களுடன்
'பாரதிபுரம் அமர்ந்தவள்' என்ற
புதுப் பெயரும் இருந்தது.
நெமிலிச்சேரி மெயின் ரோட்டில் நடந்த யுத்தத்தில்
அசுரர்களை அழித்து விட்டு
சினம் தணிய பாரதிபுரத்தில்
அமர்ந்து விட்டாளோ என்று யோசித்தேன்.
அவள் முகத்தை உற்றுப் பார்த்தேன் விளக்கு ஒளியில்.
எங்கள் ஊர்க்காரி முகம் மாதிரிதான் இருந்தது.

(c) veenaapponavan@yahoo.com

1 comments:

Perundevi said...

நெமிலிச்சேரி மெயின்ரோட்டில் என்ன யுத்தம் நடந்தது, நடந்திருக்கலாம்....?