சுரங்கப்பாதை பொம்மை வியாபாரி
இரண்டு வாத்துகளுக்கு
சாவி கொடுத்து
தயாராக வைத்திருந்தான்.
ரயில் விட்டு
கூட்டம் இறங்கி வர ஆரம்பித்ததும்
ஒன்றன்பின் ஒன்றாக
வாத்துகளை விடுவித்தான்.
முதல் வாத்து ஓடிப் போய்
ஒரு சிறுமியின் காலை முட்டியது.
பிரியப்பட்டு அவள் அதை வாங்கிக் கொண்டாள்.
பின்னால் போன வாத்து
சாவி தளர்ந்து
தனியாய்த் திரும்பி வந்தது.
சிறுமி வாங்கிப் போன வாத்து
அவள் வீடு பழகும்வரை
சுரங்கப்பாதை இருந்த திசை நோக்கியே
ஓடிக் கொண்டிருந்தது.
(c) veenaapponavan@yahoo.com
Thursday, October 18, 2007
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
அய்யா, அத்த்தனை பொழுதுகளையும் கவிதைகளாய் பார்க்கும் திறனை எங்கிருந்து கற்றீர்கள்?
Post a Comment