Thursday, October 18, 2007

முன்பல் விழுந்த ரயில் பெட்டி

அத்தனை சிறிய சிறுமிக்கும்
தனி இருக்கை பதிவு செய்திருந்தார்கள்
ரயில் பெட்டியில்.
அவள் அங்கு உட்காராமல்
பெட்டி முழுவதும்
பறந்து திரிந்து கொண்டிருந்தாள்.
எல்லா இருக்கைகளும் நிரம்பி
அவள் இடம் மட்டும்
காலியாக இருந்தது
பயணம் முழுவதும்.
அந்தப் பெட்டியே
முன்பல் விழுந்த
அவளது சிரிப்பைப் போல
தோற்றமளித்தது.

(c) veenaapponavan@yahoo.com

4 comments:

Karthika said...

Hi Mukundh,
This is Karthika from Tirunelveli. This poem seems to be familiar that I've already read it in such magazine with ur name. And also "Mugam Thiruthuthal", "Alugural Unjal", "Iravukkana koodu", "Surangapathai vathu", "Naanthan Minvilakku", "Rail pen". I've read all the above (ur) poems in such magazine. All of them make me to smile, exclaim, feel and show the faces of that children too in my dreams.

ஜோதிபாரதி said...

அருமையான கவிதை!


அன்புடன்,
அத்திவெட்டி ஜோதிபாரதி.

Shakthiprabha said...

wow!

பிரதீப் said...

உங்களின் தலைப்புகளே கவிதைகள் தான்!