பிள்ளைகளுடன் மேல் பெர்த்துக்குப்
போன அம்மா
சாப்பாட்டுப் பொட்டலத்தைப் பிரித்து
ஊட்டி விட ஆரம்பித்தாள்.
அப்பா குருவி வெளியே போய்
தண்ணீர் பாட்டில் வாங்கி வந்தது.
ஒரு இரவுக்கான கூடு
உருவாகியிருந்தது
ரயில் கிளம்புவதற்கு முன்னால்.
(c) veenaapponavan@yahoo.com
Tuesday, December 11, 2007
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
நல்ல கவிதை
நல்லா இருக்கு. எனக்குப் பிடித்திருக்கிறது.
Post a Comment