Tuesday, December 11, 2007

முகம் திருத்துதல்

மேல் பெர்த்தில் இருந்து
இறக்கி விட்டதற்காக
அம்மாவிடம் கோபித்துக் கொண்டு
முகத்தைத் திருப்பிப் படுத்துக் கொண்டவள்
ஐந்து நிமிஷத்தில் அப்படியே
தூங்கியும் விட்டாள்.
கோபமாகத் தூங்குகிற மகளை
கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்த
அவள் அம்மா அப்புறம்
போர்வையை ஒழுங்கு செய்வது போல்
மகளின் முகத்தை சரி செய்து விட்டாள்.
தூக்கம் கலையாமல்
பட்டுப் பாவாடையை கழற்றி விட்டு
பழைய கவுனை அணிவிப்பது போல
அத்தனை எளிதாக.

(c) veenaapponavan@yahoo.com

6 comments:

பாண்டித்துரை said...

அன்பின் முகுந்த குழந்தைகளுக்கான கவிதை அல்லது குழந்தைகளின் உணர்வுகளை பிரதிபலிக்ககூடிய கவிதை அவ்வளவாக இங்கு எழுதபடிவில்லை என்று இருந்தேன். தோழி அனிதாவின் வலை பக்கங்களுக்கு நான் சென்று வந்தாலும் அங்குள்ள இணைப்பில் நான் உங்களை கண்டதில்லை. நேற்று அனிதாவிடனான தொலைதொடர்பில் உங்களை பற்றி சொன்னார்கள். இன்று உங்கள் வலைதரிசனம்கவிதைகள் நன்றாக உள்ளது.
www.pandiidurai.wordpress.com
தோழமையுடன்
பாண்டித்துரை

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நல்லா வந்திருக்கு... வாழ்த்துகள்.

பாண்டித்துரை said...

ஆனந்தவிகடனில் உங்களின் கவிதைகள் வந்தமைக்கு வாழ்த்துகள்

M.Saravana Kumar said...

மகளின் முகத்தை சரி செய்து விட்டாள்.
தூக்கம் கலையாமல்
பட்டுப் பாவாடையை கழற்றி விட்டு
பழைய கவுனை அணிவிப்பது போல
அத்தனை எளிதாக.

பரிசல்காரன் said...

அருமையாக அமைந்துள்ளது...! அதுவும் அந்தக் கடைசி வரிகள்....

பிரதீப் said...

a masterpiece!