Monday, February 19, 2007

பெரும்பழம்

ஒருத்தனுக்கு எதற்கு
ஒரு முழு தர்பூசனிப் பழம்?
யோசிக்காமல் வாங்கி வந்து விட்டேன்.
புத்தகங்களும் தினசரிகளும்
அடுக்கி வைத்திருக்கும்
இருட்டு சமையல் அறையில்
வைத்தேன் அந்தப் பழத்தை.
வீட்டில் நடமாடும் போதெல்லாம்
கண்ணில் பட்டு திகில் ஊட்டுகிறது.
நிறைவேற்ற முடியாத சத்தியத்தைப் போல
கனமாக இருக்கிறது,
மிச்சத்தை என்ன செய்வது என்று தெரியாமல்
அப்படியே வைத்திருக்கும் பெரும்பழம்

(c) veenaapponavan@yahoo.com