அத்தனை சிறிய சிறுமிக்கும்
தனி இருக்கை பதிவு செய்திருந்தார்கள்
ரயில் பெட்டியில்.
அவள் அங்கு உட்காராமல்
பெட்டி முழுவதும்
பறந்து திரிந்து கொண்டிருந்தாள்.
எல்லா இருக்கைகளும் நிரம்பி
அவள் இடம் மட்டும்
காலியாக இருந்தது
பயணம் முழுவதும்.
அந்தப் பெட்டியே
முன்பல் விழுந்த
அவளது சிரிப்பைப் போல
தோற்றமளித்தது.
(c) veenaapponavan@yahoo.com
Thursday, October 18, 2007
காற்று இறக்கும் கடவுள்
புது வண்டிகளை ஆசீர்வதிக்கும்
கடவுள் ஒருவர் தோன்றி இருக்கிறார்
எங்கள் ஏரியாவில்.
இரண்டு, மூன்று, நான்கு சக்கர
வாகனங்களை வாங்கியவுடன்
இவரிடம் அழைத்து வருகிறார்கள்.
அவற்றின் மேல் நீர் தெளித்து
சந்தனம், குங்குமம் தடவி
ஆசீர்வதித்து அனுப்புகிறார்.
புறக்கணிக்கப்பட்ட பழைய கடவுளோ
கையில் ஆணியுடன்
பக்கத்து சிக்னலில்
சுற்றிக் கொண்டிருக்கிறார்,
வண்டிகளில் இருந்து காற்று இறக்கி விட.
(c) veenaapponavan@yahoo.com
கடவுள் ஒருவர் தோன்றி இருக்கிறார்
எங்கள் ஏரியாவில்.
இரண்டு, மூன்று, நான்கு சக்கர
வாகனங்களை வாங்கியவுடன்
இவரிடம் அழைத்து வருகிறார்கள்.
அவற்றின் மேல் நீர் தெளித்து
சந்தனம், குங்குமம் தடவி
ஆசீர்வதித்து அனுப்புகிறார்.
புறக்கணிக்கப்பட்ட பழைய கடவுளோ
கையில் ஆணியுடன்
பக்கத்து சிக்னலில்
சுற்றிக் கொண்டிருக்கிறார்,
வண்டிகளில் இருந்து காற்று இறக்கி விட.
(c) veenaapponavan@yahoo.com
சுரங்கப்பாதை வாத்து
சுரங்கப்பாதை பொம்மை வியாபாரி
இரண்டு வாத்துகளுக்கு
சாவி கொடுத்து
தயாராக வைத்திருந்தான்.
ரயில் விட்டு
கூட்டம் இறங்கி வர ஆரம்பித்ததும்
ஒன்றன்பின் ஒன்றாக
வாத்துகளை விடுவித்தான்.
முதல் வாத்து ஓடிப் போய்
ஒரு சிறுமியின் காலை முட்டியது.
பிரியப்பட்டு அவள் அதை வாங்கிக் கொண்டாள்.
பின்னால் போன வாத்து
சாவி தளர்ந்து
தனியாய்த் திரும்பி வந்தது.
சிறுமி வாங்கிப் போன வாத்து
அவள் வீடு பழகும்வரை
சுரங்கப்பாதை இருந்த திசை நோக்கியே
ஓடிக் கொண்டிருந்தது.
(c) veenaapponavan@yahoo.com
இரண்டு வாத்துகளுக்கு
சாவி கொடுத்து
தயாராக வைத்திருந்தான்.
ரயில் விட்டு
கூட்டம் இறங்கி வர ஆரம்பித்ததும்
ஒன்றன்பின் ஒன்றாக
வாத்துகளை விடுவித்தான்.
முதல் வாத்து ஓடிப் போய்
ஒரு சிறுமியின் காலை முட்டியது.
பிரியப்பட்டு அவள் அதை வாங்கிக் கொண்டாள்.
பின்னால் போன வாத்து
சாவி தளர்ந்து
தனியாய்த் திரும்பி வந்தது.
சிறுமி வாங்கிப் போன வாத்து
அவள் வீடு பழகும்வரை
சுரங்கப்பாதை இருந்த திசை நோக்கியே
ஓடிக் கொண்டிருந்தது.
(c) veenaapponavan@yahoo.com
Sunday, October 14, 2007
பாரதிபுரம் அமர்ந்தவள்
நெமிலிச்சேரி மெயின்ரோடு, பாரதிபுரம்
அருள்மிகு ஸ்றீ முத்துமாரியம்மன் ஆலய
18-ஆம் ஆண்டு ஆடி மாத திருவிழா
அழைப்பிதழில் இருந்த செய்யுளில்
'முத்துமாரி, முப்பெருந்தேவி,
சங்கரி, பராசக்தி' என்ற பெயர்களுடன்
'பாரதிபுரம் அமர்ந்தவள்' என்ற
புதுப் பெயரும் இருந்தது.
நெமிலிச்சேரி மெயின் ரோட்டில் நடந்த யுத்தத்தில்
அசுரர்களை அழித்து விட்டு
சினம் தணிய பாரதிபுரத்தில்
அமர்ந்து விட்டாளோ என்று யோசித்தேன்.
அவள் முகத்தை உற்றுப் பார்த்தேன் விளக்கு ஒளியில்.
எங்கள் ஊர்க்காரி முகம் மாதிரிதான் இருந்தது.
(c) veenaapponavan@yahoo.com
அருள்மிகு ஸ்றீ முத்துமாரியம்மன் ஆலய
18-ஆம் ஆண்டு ஆடி மாத திருவிழா
அழைப்பிதழில் இருந்த செய்யுளில்
'முத்துமாரி, முப்பெருந்தேவி,
சங்கரி, பராசக்தி' என்ற பெயர்களுடன்
'பாரதிபுரம் அமர்ந்தவள்' என்ற
புதுப் பெயரும் இருந்தது.
நெமிலிச்சேரி மெயின் ரோட்டில் நடந்த யுத்தத்தில்
அசுரர்களை அழித்து விட்டு
சினம் தணிய பாரதிபுரத்தில்
அமர்ந்து விட்டாளோ என்று யோசித்தேன்.
அவள் முகத்தை உற்றுப் பார்த்தேன் விளக்கு ஒளியில்.
எங்கள் ஊர்க்காரி முகம் மாதிரிதான் இருந்தது.
(c) veenaapponavan@yahoo.com
Subscribe to:
Posts (Atom)