அதிகாலை வந்திறங்கி
பனிக் குல்லாயைக் கழற்றி விட்டு
திறந்த வாய் மூடாமல்
சென்ட்ரல் ஸ்டேஷனைப்
பார்த்தது கைக்குழந்தை
வாழ்க்கையில் முதல் முறையாய்.
உயரமான கூரையை அண்ணாந்து
பார்த்துக் கொண்டிருந்த போது
'நல்லா இருக்கா..
இதான் சென்ட்ரல் ஸ்டேஷன்' என்று
அம்மாவின் குரல் காதருகே
மெதுவாய்க் கேட்டது.
திரும்பி அம்மாவைப் பார்த்து சிரித்தது.
அப்படியே நான்காவது நடைமேடையில் இருந்த
எடை பார்க்கும் கருவியில்
வட்ட வட்டமாய் சுழன்று ஒளிர்ந்து கொண்டிருந்த
ஆரஞ்சு விளக்கினை
குறித்து வைத்துக் கொண்டது.
(c) veenaapponavan@yahoo.com
Friday, February 15, 2008
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
பாலைவனத்தில் கண்ட நீர் மாதிரி, ஆஹா..ஆஹா..என்று துள்ளிக் குதிக்க வேண்டும் போல இருக்கிறது..இன்று தான் உங்கள் பதிவைக் கண்டேன்..ஒன்று விடாமல் முழுமையாக வாசித்தும் விட்டேன்.. ஒவ்வொரு கவிதையையும் தனித்தனியே பாராட்ட வேண்டும் என்றால் தனியாக பதிவே தொடங்க வேண்டி வரும்.. உங்கள் கவிதைகள் எங்கும் துள்ளி ஓடும் குழந்தைகளும் படிமங்களும் சொல்ல இயலாம உற்சாகம் தருகின்றன. உங்கள் கவிதைகளை வலையில் தருவதற்கு என் மகிழ்ச்சியும், நன்றியும். தயவு செய்து தொடர்ந்து எழுதுங்கள்.
Hello Herr Poet :) ... Consider urself tagged... Play if u wanna...
The Music Tag Game
i did a little research after you told me about your "thing", and if you want a way to make more money using your your blog you can enter this site: link. bye.
அருமை.. அழகு ..
Post a Comment