அவள் எழுதிய எட்டாவது வாய்ப்பாடு
பேப்பரின் மேல்பக்கம் இடது ஓரம் தொடங்கி
படிப்படியாக கீழ்ப்பக்கம் வலது ஓரம்
நோக்கி வளர்ந்து இருந்தது.
"எட்டு நாலு முப்பத்தாறு"
என்ற வரியை மட்டும்
பேனாவால் சுழித்தேன்.
முப்பத்தாறுதான் என்றாள்.
யோசித்து சொல்லச் சொன்னேன்.
கண்ணை மூடிக்கொண்டு
தீவிரமாக முணுமுணுத்தாள்.
வாய்ப்பாட்டின் தாளம்
மீண்டும் மீண்டும் அவளை
முப்பத்தாறுக்கே கூட்டிச் சென்றது.
என் ஒரு கிரவுண்டு மனையின் பரப்பளவு
எத்தனை சதுர அடிகள்
அதிகமாகி இருக்கும் என்று
கணக்கு போட ஆரம்பித்தேன்.
(c) veenaapponavan@yahoo.com
Saturday, May 31, 2008
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
நிதர்சனம்
அடடா ... உங்களையும் கணக்கு போட வைத்து விட்டாளே...
:D
(சாரிங்க, படித்த அடையாளத்தை பதிக்காமல் சில பல நேரம் மனம் வரவில்லை )
Q8!!
Post a Comment