ஞாயிற்றுக் கிழமை காலைக்காட்சி
கூட்டம் குறைவாக இருந்த
மலையாளப் படத்துக்கு
தன் கிளியுடன் வந்திருந்தான்
பஸ் ஸ்டாண்ட் கிளி ஜோசியக்காரன்.
அவ்வபோது கிளியின் குரல்
கேட்டுக் கொண்டிருந்தது தியேட்டரில்.
படம் முடிந்து போகும்போது
கூண்டுக்குள் சிதறிக் கிடந்த
பாப்கார்னை பார்த்துக் கொண்டு
சோர்வாக உட்கார்ந்திருந்தது கிளி.
(c) veenaapponavan@yahoo.com
Sunday, June 01, 2008
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
முகுந்த்
சில நேரங்களில் கிளிபோல்தான் நாமும்.கூர்மையான கவிதை.
ராஜாசந்திரசேகர்
ராஜாவின் பின்னூட்டம் சரிதான்.
"சில நேரங்களில் கிளிபோல்தான் நாமும்.கூர்மையான கவிதை."
REPEATEE..
இக்கவிதையின் கட்டுடைப்பு(என் புரிதல்)
பஸ் ஸ்டாண்ட் - சமூகம்
ஜோஸ்யக்காரன் - சமூக மனிதன்
கிளி - அவனுள் இருக்கும் மாற்று மனிதன்
கூண்டு - கட்டற்ற காமத்தை அடைக்கும் சமூகத்தின் மதிப்பீட்டுச் சிறை
கிளியின் குரல் - வெளி வரத் துடிக்கும் காமத்தின் உத்வேகம்
கிளியைப் பொருட்படுத்தாமல் படம் பார்க்கும் ஜோஸ்யன் - சமூகத்தின் கட்டுக்குள் இயங்கும் சராசரி சமூக மனிதன்
சிதறிய பாப்கார்ன் - சமூகத்தின் பொதுமைக் காமம்(விந்து?!)
கிளியின் சோர்வு - மதிப்பீட்டுக் கட்டுத்தளைகளை உடைத்து வெளி வர முடியாத சமூக மனிதனின் காமம்
நல்ல குறியீட்டுக் கவிதை..வாழ்த்துகள்!
மறுபடியும் பல கோணங்கள்.
எனக்குப்பிடித்த கோணலை மௌனமாய் ரசித்துக்கொள்கிறேன்.
Post a Comment