காசு கொடுத்த போது
பெயர் கேட்கத் தோன்றவில்லை.
அணைத்துக் கொள்ளும் போது
பெயர் அவசியமாக இருந்தது.
ஒரு கணம் யோசித்து
ப்ரிஸில்லா என்றாள்.
அவளை அணைத்து முடிக்க
அந்தப் பெயரின் நீளம் போதவில்லை.
ப்ரிஸில்லா ப்ரிஸில்லாவாக
மாற்றி மாற்றி வைத்து
அணைத்து முடித்தேன்.
(c) veenaapponavan@yahoo.com
Sunday, June 01, 2008
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
I found this disturbing :(, especially the "anaithu mudithal" :(:(
ப்ரிசில்லாவை புரிந்துகொள்ள முடியவில்லை. இருந்தாலும் கவிதை வசீகரம்.
நல்ல கவிதை முகுந்த் நாகராஜன். அணைப்புக்கேற்ற பெயராகி விட்டாள் அவள்.
அட.. உங்கள் எல்லா கவிதைகளும் ரொம்ப நல்லா இருக்குங்க..
ஒரு வித்தியாசமான உணர்வையும் சூழலையும் தருகின்றன..
உங்கள் கவிதைகளை படிக்கையில் ஒரு வித்தியாசமான சூழலில் வசித்த ஒரு அனுபவமும் குதுகலமும் வருகிறது..
சில பழைய ஆங்கில பதிவுகளை மீண்டும் இப்போது தமிழில் மாற்றிவிடலாமே..
ஒவ்வொரு கவிதையும் மிக பிரமாதம்.. மிக்க அருமை..
உங்கள் பணி தொடரட்டும்.. எங்களை மகிழ்விக்கட்டும்..
மீண்டும் சிந்திப்போம்..
வாழ்த்துக்கள்..
அடுத்த பதிவ போடுங்க.. எவ்ளோ நாளா காத்திருக்கிறது..???
இந்தக் கவிதையை ஆனந்த விகடனில் வாசித்தேன். இப்பொழுதுதான் உங்கள் வலைப்பூ பார்த்தேன். கவிதைகள் அனைத்தும் அருமை முகுந்த். வாழ்த்துகள்.
interesting. not sure why you still need to know the name...not that convincing....
Post a Comment