புறநகர் ரயில்வே ஸ்டேஷனில்
புதிதாக வேலைக்குச் சேர்ந்தவள்
ரயிலுக்குப் பச்சை சிக்னல் காட்ட
மிகவும் தயங்குகிறாள்.
எல்லோரும் ஏறி இறங்கியதை
உறுதிப்படுத்திக் கொண்டபின்னரே
ரயிலை எடுக்க அனுமதிக்கிறாள்.
ஒரு வாரமாக அந்த ஸ்டேஷனில் ரயில்
ஒரு நிமிடம் தாமதித்தே செல்கிறது.
சில பயணிகள்
அவளைப் பார்த்துப் புன்னகைக்கின்றனர்.
அவள் தன் வேலையில் கவனமாக இருக்கிறாள்.
வண்டியை எடுக்க அனுமதிக்கும் போது மட்டும்
பளீரென புன்னகைக்கிறாள் பச்சை நிறத்தில்.
(c) veenaapponavan@yahoo.com
Friday, October 10, 2008
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
அட. ரொம்ப அழகா இருக்கு இந்த கவிதை.. என்னவோ ஒரு மாயம் இருக்கிறது உங்கள் வரிகளில்.. வார்த்தைகளில்..
//எல்லோரும் ஏறி இறங்கியதை
உறுதிப்படுத்திக் கொண்டபின்னரே
ரயிலை எடுக்க அனுமதிக்கிறாள்.//
இந்த மாதிரி செய்யும் ஒரு பெண்மணியை நான் தினமும் பார்க்கிறேன் என் ரயில் பயணத்தில்.. :)
அழகான கவனிப்பு அல்லது அவதானம்.
அன்புடன்
சூர்யா.
சரவணனும் வேலனும் (என்ன ஒற்றுமை!) சொல்வதுபோல் ஒரு எளிய மாயம் இருக்கு உங்க கவிதைகளில். அதுவும் ரயில், ரயில்வே ஸ்டேஷன் என்றால் கேட்கவே வேண்டாம்.
அனுஜன்யா
For once I got it :(, but seriously, superb!
முகுந்த்,
எப்படிங்க இவ்வளவு நல்லா எழுதுறீங்க.
முன்னாலன்ன உங்க பேனால என்ன ஊத்தி எழுதறீங்கன்னு கேக்கலாம். இப்ப எப்படிக் கேக்கன்னு தெரியல.
This is what J.K's approach..."Samudhaya paarvai + Edaiyum Koorndu kavanithal"...
Good luch Mukunth...i got ur identity from Vikatan only...
Post a Comment