Thursday, October 09, 2008

வெண்ணிலாவின் தேரிலேறி

நல்ல மழை பெய்து கொண்டிருந்த
ஒரு நாளில்
கூட்டமில்லாத கம்பார்ட்மென்ட்டில்
என் எதிரில் வந்து உட்கார்ந்தார்கள்
நனைந்த அந்த இருவரும்.
அவன் டை கட்டிக் கொள்ள ஆரம்பித்தான்.
அவள் சினிமா பாடல்கள் நிரம்பிய ஒரு
டைரியை எடுத்துப் புரட்டலானாள்.
அவள் பாடல்களை
வரிசைப்படுத்திக் கொண்டிருக்கும்போது
அவன் கல்யாண மண்டபம் எங்கிருக்கிறது என்று
செல்போனில் யாரிடமோ விசாரித்துக் கொண்டான்.
இருவரும் கொஞ்ச நேரம்
பாடல்களை பயிற்சி செய்தார்கள்.
'அண்டம் எல்லாம் நின்று போகும்'
என்று பாடினான் அவன்.
'நின்று போகாது; விண்டு போகும்'
என்று சிரித்தாள் அவள்.
சந்தோஷமாக விவாதிக்க ஆரம்பித்தார்கள்.
என்னிடம் கேட்டபோது
விண்டுதான் போகும் என்றேன்.
'சாரி சொல்லு, சாரி சொல்லு'
என்று சத்தம் போட்டாள்.
அவன் சொன்னான்.
இருவரும்
வெண்ணிலாவின் தேரிலேறி
சைதாப்பேட்டையில் இறங்கினார்கள்.

(c) veenaapponavan@yahoo.com

5 comments:

Saravana Kumar MSK said...

:))

அனுஜன்யா said...

நல்லா இருக்கு முகுந்த். welcome back. நிறைய எழுதலாமே நீங்க.

அனுஜன்யா

sundarind75@yahoo.com said...

arumai mukundh

thangalin agi 139 and 21cm kavithai thoguppu mikka arumai thangalin valaippathivu patri vikatan moolam arinthen. en nanbargalukkum therivithullen. thangal kavithaigal andrada nigazhvugalai otti visualize aga uyir peruguvathaleye thani vaasippu anubhavam kidaikirathu. thangal profile moolam ennai polavey physics bertrand russel ungalukku pidikum ena arinthathil magizhchi. kurai iruppin mannikkavum. thodarattum ungal kavithaippani. magizhvudan anban
sundar g

Tamizh Saravanan said...

அனைத்துக்கவிதைகளும் அருமை

வாழ்த்துக்கள்!!

அன்புடன்,
தமிழ். சரவணன்

Shakthiprabha said...

:)