Saturday, November 22, 2008

கடவுளின் கையெழுத்து

கரப்பான்பூச்சிகள் ஓடி மறையும்
பரிமாணத்தில் இருந்து தோன்றினார்
காலெண்டரில் பார்த்த கடவுள்.
இருட்டில் ரயில் நிற்கும் நிலையங்களின்
பெயர்களை எல்லாம் ஓயாமல்
பால்பாயிண்ட் பேனாவால்
என் வலது உள்ளங்கையில்
எழுதிக் காட்டிக் கொண்டிருந்தார்.
நான் இறங்கும் இடம் வந்ததும்
என் பயணச்சீட்டில்
தன் கையெழுத்தைப் போட்டு விட்டு
குண்டூசிகள் விழுந்து மறையும்
திசையில் சென்று மறைந்தார்.
ரயில் நிலையத்தை
விட்டு வெளியேறும்போது
அந்த பயணச்சீட்டை
பரிசோதகர் கேட்டு வாங்கிக் கொண்டார்.

(c) veenaapponavan@yahoo.com

2 comments:

Saravana Kumar MSK said...

அழகு..

and கடவுளோட பயணம் செஞ்சிருக்கீங்க.. :)

Shakthiprabha said...

:embarassed:

புரிஞ்சமாதிரியும் இருக்கு. புரியாத மாதிரியும். I'm sure u aren't gonna take pain to explain and please dont. All is lost when any point of view is dissected.

ஏதேதோ வித்தியாசமான கோணங்களில் அர்த்தம் தோணுது. அதில் எது சரி? அவரவர்க்கு எந்த கோணம் புரியுதோ புடிச்சிருக்கோ அது தான் சரி. இதையும் வைத்து ஒரு குட்டி கவிதை எழுதிவிடுவீர்கள்.