Saturday, December 20, 2008

நாய் பொம்மை

1

வரிசையாக
அடுக்கி வைக்கப்பட்டிருந்த
நாய் பொம்மைகளில்
குழந்தை விளையாடி விட்டு
வைத்துச் சென்ற
பொம்மையின் முகத்தில் மட்டும்
கூடுதல் சிரிப்பு.

2

தன் பெயரின் முதல் எழுத்தை
கழுத்தில் மாட்டிய பொம்மையை
எடுத்து வைத்துக் கொண்டு
தன் காதலன் பெயருக்கான பொம்மையை
ஆவலுடன் தேடுகிறாள் காதலி.

3

பொம்மை வாங்க இயலாத ஒருவன்
தன் குழந்தைக்குச் சொல்ல ஒரு
நாய்க் கதையை உருவாக்கிக் கொண்டு
நகர்கிறான் கடையை விட்டு.

(c) veenaapponavan@yahoo.com

11 comments:

Ganga said...
This post has been removed by the author.
Ganga said...

Preserved that doll. :)

வடகரை வேலன் said...

முதல் கவிதை அற்புதம். எப்படித்தான் இப்படியெல்லாம் யோசிக்கிறீங்களோ?

சாதாரணமாத் தோனல. ஆனா நீங்க சொன்னப்புறம், ஒரு குறுஞ்சிரிப்பு வருவதைத் தவிர்க்க முடியல.

வாழ்த்துக்கள்.

Saravana Kumar MSK said...

அட்டகாசம்.. பாஸு.. எப்படி இப்படியெல்லாம் எழுதறீங்க.. மூன்றுமே முத்துக்கள்..

dhana said...

interesting impagination or observation, either way is nice. VP, could this be expressed bit more fiercefully, felt little elaborate for a very poetic expression.

Muruganandhan said...
This post has been removed by the author.
அப்பு சிவா said...

//பொம்மை வாங்க இயலாத ஒருவன்
தன் குழந்தைக்குச் சொல்ல ஒரு
நாய்க் கதையை உருவாக்கிக் கொண்டு
நகர்கிறான் கடையை விட்டு.//

அழகாக இருக்கிறது!

வெங்கடேஷ் குமாரவேல் said...

muthal kavithai piramAdham!
ungaLathu aki, 21 ce.mI mazhai padithirukkiREn. ungaL rasigan nAn. salAm!

தமிழ் விரும்பி said...

நாய் பொம்மை !!
நம்முடன் வாழ்கிறது !!
நாம் வாழ்கிறோமா என்று தான் தெரியவில்லை !!

D.R.Ashok said...

1=2

2=4

3= sixer

kartin said...

series' ultimatum at 3 !!