விளையாடிக் கொண்டிருந்த
கீழ்வீட்டுக் குழந்தையின் கையில்
புது தாயத்து மின்னியது.
என்ன விஷயம் என்று கேட்டேன்
அவள் அப்பாவிடம்.
ஊரில் இருந்த
அவர் மனைவியின் தங்கை
காமாலையில் இறந்து போய் விட்டாளாம்.
அவளுக்கு இந்தக் குழந்தை மேல்
ரொம்ப பிரியமாம்.
ஊருக்குப் போனால் இரண்டு பேரும்
எப்போதும் சேர்ந்தே இருப்பார்களாம்.
குழந்தையைக் குளிப்பாட்டுவாளாம்.
இடுப்பில் வைத்துக் கொண்டு
ஊர் முழுக்க சுற்றி வருவாளாம்.
அநியாயமாக இறந்து விட்டாள் பாவம்.
தாயத்து பற்றி ஒன்றும் சொல்லவில்லையே என்று
நினைத்துக் கொண்டே மேலே வந்தேன்.
சொல்லி விட்ட மாதிரியும் இருந்தது.
அதோடு விட்டு விட்டேன்.
(c) veenaapponavan@yahoo.com
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
'தாயத்து பற்றி ஒன்றும் சொல்லவில்லையே என்று
நினைத்துக் கொண்டே மேலே வந்தேன்.
சொல்லி விட்ட மாதிரியும் இருந்தது.'
இது நல்லா இருக்கு.
இக்கவிதையை மட்டும் முன்பே நீங்கள் ஏதோ ஒரு குழுமத்தில் இட்டுருந்தீர்கள் என நினைக்கிறேன். இதைப் பற்றிய என் கருத்தும் கூட லேசாய் நினைவில் உள்ளது.
வி.போ அவர்களே,
கடந்த 2 மணிநேரத்தில் உங்களின் அனைத்து கவிதைகளையும் படித்தேன். வேறு உலகில் சென்று வந்தது போல் ஒரு மயக்க நிலை என்று தான் சொல்ல வேண்டும்.
ஒவ்வொரு கவிதைக்கும் மறுமொழி இட்டால் அதிகத் தொல்லை என்று நினைத்தும் கூட, சில கவிதைகள் என்னையும் அறியாமல் பின்னூட்டமிட வைத்தன.
உங்கள் கவிதை பற்றி நான் என்ன சொல்வது! வார்த்தைகள் போதவில்லை.
இல்லை.
வார்த்தைகள் தேவையில்லை.
பின்றீங்க பாஸு..
//தாயத்து பற்றி ஒன்றும் சொல்லவில்லையே என்று
நினைத்துக் கொண்டே மேலே வந்தேன்.
சொல்லி விட்ட மாதிரியும் இருந்தது.
அதோடு விட்டு விட்டேன்.//
//ஒன்றும் சொல்லவில்லையே என்று
நினைத்துக் கொண்டே மேலே வந்தேன்.
சொல்லி விட்ட மாதிரியும் இருந்தது//
இதுதான் உங்க கவிதைகளின் அழகு.
நல்லா இருக்கு
vp,
are you the same person who wrote these poems:
http://forumhub.com/poems/13278.11326.00.19.29.html
over 6 yrs ago I used to print some 7-8 pgs of your poems and read them while commuting in Bombay :-)
Thanks Karthika, Shakthiprabha, Saravanakumar MSK, Vadakarai Velan and Talkative Man.
@ The Talkative Man, Yes. I used to post in forumhub longtime back. Used to get nice comments and quite a few friends there. Thanks for reminding me those days. :)
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..
good mix of ignorance and fear expressed in a subtle way.
nice
Post a Comment