Saturday, December 20, 2008

மேஜிக்

மேடையில் ஒருவனை
மேஜை மேல் படுக்க வைத்து
இரண்டு துண்டாக வெட்டினார்
மேஜிக் நிபுணர்.
அப்புறம்
மேடையிலேயே மாரடைத்து
மயங்கி விழுந்தார்.
பார்வையாளராக இருந்த
மருத்துவர் மேடை ஏறினார்.
வினோத விளக்குகளின் ஒளியில்
நிபுணரின் மரணத்தை உறுதி செய்தார்.
அந்த மேஜையை
ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே
கீழிறங்கினார்.

(c) veenaapponavan@yahoo.com

1 comments:

Saravana Kumar MSK said...

//அந்த மேஜையை
ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே
கீழிறங்கினார்.//

அப்பறம் என்னாச்சி..??
கொஞ்சம் பயமா இருக்கே..