பிள்ளையார் சதுர்த்தி முடிந்து
கரைப்பதற்காக
கோயில் வாசலில்
வந்து சேர்ந்து கொண்டிருந்தனர்
சின்னதும் பெரியதுமான பிள்ளையார்கள்.
மொத்தம் 25.
ஐந்து ஐந்தாக அவற்றை
சதுர வடிவில் அமைத்தான் சிறுவன்.
எரிந்து கொண்டிருந்த அகல் விளக்குகளில்
நான்கை எடுத்து வந்து
நான்கு மூலைகளிலும் வைத்தான்.
ஒரு எருக்கம்பூ மாலையைப் பிரித்து
ஒவ்வொரு பிள்ளையார் முன்பும்
ஒவ்வொரு பூவாக வைத்தான்.
தள்ளி நின்று பார்த்தான்.
நடுவில் இருக்கும் பிள்ளையாரை
எடுத்து விட்டு
அங்கே இன்னொரு விளக்கை
வைக்கத் தோன்றியது அவனுக்கு.
கவனமாக குனிந்து
நடுப்பிள்ளையாரை பத்திரமாக எடுத்து
மேல் படிக்கட்டில் வைத்தான்.
அவர் மற்ற 24 பிள்ளையார்களை
அங்கிருந்து பார்த்துக் கொண்டிருந்தார்.
அவருக்கு மட்டும்
இரண்டு பக்கத்திலும் விளக்குகள் அமைத்து
ஒரு முழு மாலையை அணிவித்தான்.
அவர் நிறைவு எய்தினார்.
(c) veenaapponavan@yahoo.com
Friday, September 19, 2008
க்ருஷ்ணன் நிழல்
குழல் விளக்கு
பழுதாகிப் போன அறையில்
பல்ப் மாட்டினேன்.
எதிர்பாராத இடங்களிலெல்லாம்
நிழல் விழுந்து கொண்டிருக்கிறது.
வீட்டில் கட்டிக் கொடுத்த
முறுக்குப் பொட்டலத்தைப் பிரித்தபோது
அதன் நுனியில் விழுந்தது
மேஜையின் ஓரம் வைத்து மறந்து போன
தூசி படிந்த
க்ருஷ்ணன் பொம்மையின் நிழல்.
(c) veenaapponavan@yahoo.com
பழுதாகிப் போன அறையில்
பல்ப் மாட்டினேன்.
எதிர்பாராத இடங்களிலெல்லாம்
நிழல் விழுந்து கொண்டிருக்கிறது.
வீட்டில் கட்டிக் கொடுத்த
முறுக்குப் பொட்டலத்தைப் பிரித்தபோது
அதன் நுனியில் விழுந்தது
மேஜையின் ஓரம் வைத்து மறந்து போன
தூசி படிந்த
க்ருஷ்ணன் பொம்மையின் நிழல்.
(c) veenaapponavan@yahoo.com
அறிவிக்கப்பட்ட மின்வெட்டு
தோசை மாவை அரைத்து முடித்தாயிற்று.
மோட்டார் போட்டு தண்ணீரை
மேலே ஏற்றியாகி விட்டது.
எட்டு மணிக்குள் பாதுகாப்பான இடம் தேடி
உட்கார்ந்தாகி விட்டது.
8 ஆயிற்று.
மின்வெட்டு ஆகவில்லை.
8.01 ஆயிற்று.
8.02 ஆயிற்று.
பதட்டம் நீடிக்கிறது.
(c) veenaapponavan@yahoo.com
மோட்டார் போட்டு தண்ணீரை
மேலே ஏற்றியாகி விட்டது.
எட்டு மணிக்குள் பாதுகாப்பான இடம் தேடி
உட்கார்ந்தாகி விட்டது.
8 ஆயிற்று.
மின்வெட்டு ஆகவில்லை.
8.01 ஆயிற்று.
8.02 ஆயிற்று.
பதட்டம் நீடிக்கிறது.
(c) veenaapponavan@yahoo.com
Subscribe to:
Posts (Atom)