ஓடும் ரயிலில்
அடம் பிடித்து
வாங்கிய குழலில்
அதை விற்றவன்
வாசித்த பாடலை
சலிக்காமல்
தேடிக் கொண்டிருக்கிறது
குழந்தை.
(c) veenaapponavan@yahoo.com
Monday, October 27, 2008
வாய் மட்டும்
நாயகியின் பின்னாலிருந்து
கூட்டமாக நடனம் ஆடியவர்களில்
ஒருத்தியின் முகமெங்கும்
துடித்துக் கொண்டிருந்தது
பாடலின் சந்தோஷம்;
வாய் மட்டும் அசையவில்லை.
(c) veenaapponavan@yahoo.com
கூட்டமாக நடனம் ஆடியவர்களில்
ஒருத்தியின் முகமெங்கும்
துடித்துக் கொண்டிருந்தது
பாடலின் சந்தோஷம்;
வாய் மட்டும் அசையவில்லை.
(c) veenaapponavan@yahoo.com
Friday, October 24, 2008
சாய்ந்து நடத்தல்
நேற்று
என் வலது கன்னத்தில்
அதிக முத்தம் கொடுத்து விட்டுப் போனாய்.
ஒரு காதில் மட்டும்
ஜிமிக்கி அணிந்தது போல
உறுத்தலுடன் சுற்றிக் கொண்டிருக்கிறேன்
இன்று.
(c) veenaapponavan@yahoo.com
என் வலது கன்னத்தில்
அதிக முத்தம் கொடுத்து விட்டுப் போனாய்.
ஒரு காதில் மட்டும்
ஜிமிக்கி அணிந்தது போல
உறுத்தலுடன் சுற்றிக் கொண்டிருக்கிறேன்
இன்று.
(c) veenaapponavan@yahoo.com
Friday, October 10, 2008
பச்சைப் புன்னகை
புறநகர் ரயில்வே ஸ்டேஷனில்
புதிதாக வேலைக்குச் சேர்ந்தவள்
ரயிலுக்குப் பச்சை சிக்னல் காட்ட
மிகவும் தயங்குகிறாள்.
எல்லோரும் ஏறி இறங்கியதை
உறுதிப்படுத்திக் கொண்டபின்னரே
ரயிலை எடுக்க அனுமதிக்கிறாள்.
ஒரு வாரமாக அந்த ஸ்டேஷனில் ரயில்
ஒரு நிமிடம் தாமதித்தே செல்கிறது.
சில பயணிகள்
அவளைப் பார்த்துப் புன்னகைக்கின்றனர்.
அவள் தன் வேலையில் கவனமாக இருக்கிறாள்.
வண்டியை எடுக்க அனுமதிக்கும் போது மட்டும்
பளீரென புன்னகைக்கிறாள் பச்சை நிறத்தில்.
(c) veenaapponavan@yahoo.com
புதிதாக வேலைக்குச் சேர்ந்தவள்
ரயிலுக்குப் பச்சை சிக்னல் காட்ட
மிகவும் தயங்குகிறாள்.
எல்லோரும் ஏறி இறங்கியதை
உறுதிப்படுத்திக் கொண்டபின்னரே
ரயிலை எடுக்க அனுமதிக்கிறாள்.
ஒரு வாரமாக அந்த ஸ்டேஷனில் ரயில்
ஒரு நிமிடம் தாமதித்தே செல்கிறது.
சில பயணிகள்
அவளைப் பார்த்துப் புன்னகைக்கின்றனர்.
அவள் தன் வேலையில் கவனமாக இருக்கிறாள்.
வண்டியை எடுக்க அனுமதிக்கும் போது மட்டும்
பளீரென புன்னகைக்கிறாள் பச்சை நிறத்தில்.
(c) veenaapponavan@yahoo.com
Thursday, October 09, 2008
வெண்ணிலாவின் தேரிலேறி
நல்ல மழை பெய்து கொண்டிருந்த
ஒரு நாளில்
கூட்டமில்லாத கம்பார்ட்மென்ட்டில்
என் எதிரில் வந்து உட்கார்ந்தார்கள்
நனைந்த அந்த இருவரும்.
அவன் டை கட்டிக் கொள்ள ஆரம்பித்தான்.
அவள் சினிமா பாடல்கள் நிரம்பிய ஒரு
டைரியை எடுத்துப் புரட்டலானாள்.
அவள் பாடல்களை
வரிசைப்படுத்திக் கொண்டிருக்கும்போது
அவன் கல்யாண மண்டபம் எங்கிருக்கிறது என்று
செல்போனில் யாரிடமோ விசாரித்துக் கொண்டான்.
இருவரும் கொஞ்ச நேரம்
பாடல்களை பயிற்சி செய்தார்கள்.
'அண்டம் எல்லாம் நின்று போகும்'
என்று பாடினான் அவன்.
'நின்று போகாது; விண்டு போகும்'
என்று சிரித்தாள் அவள்.
சந்தோஷமாக விவாதிக்க ஆரம்பித்தார்கள்.
என்னிடம் கேட்டபோது
விண்டுதான் போகும் என்றேன்.
'சாரி சொல்லு, சாரி சொல்லு'
என்று சத்தம் போட்டாள்.
அவன் சொன்னான்.
இருவரும்
வெண்ணிலாவின் தேரிலேறி
சைதாப்பேட்டையில் இறங்கினார்கள்.
(c) veenaapponavan@yahoo.com
ஒரு நாளில்
கூட்டமில்லாத கம்பார்ட்மென்ட்டில்
என் எதிரில் வந்து உட்கார்ந்தார்கள்
நனைந்த அந்த இருவரும்.
அவன் டை கட்டிக் கொள்ள ஆரம்பித்தான்.
அவள் சினிமா பாடல்கள் நிரம்பிய ஒரு
டைரியை எடுத்துப் புரட்டலானாள்.
அவள் பாடல்களை
வரிசைப்படுத்திக் கொண்டிருக்கும்போது
அவன் கல்யாண மண்டபம் எங்கிருக்கிறது என்று
செல்போனில் யாரிடமோ விசாரித்துக் கொண்டான்.
இருவரும் கொஞ்ச நேரம்
பாடல்களை பயிற்சி செய்தார்கள்.
'அண்டம் எல்லாம் நின்று போகும்'
என்று பாடினான் அவன்.
'நின்று போகாது; விண்டு போகும்'
என்று சிரித்தாள் அவள்.
சந்தோஷமாக விவாதிக்க ஆரம்பித்தார்கள்.
என்னிடம் கேட்டபோது
விண்டுதான் போகும் என்றேன்.
'சாரி சொல்லு, சாரி சொல்லு'
என்று சத்தம் போட்டாள்.
அவன் சொன்னான்.
இருவரும்
வெண்ணிலாவின் தேரிலேறி
சைதாப்பேட்டையில் இறங்கினார்கள்.
(c) veenaapponavan@yahoo.com
திரைப் பெண்
எல்லா ஜன்னல்களுக்கும் திரை போட்டு மூடி
வீட்டை இருட்டாக்கி விட வேண்டும்
என்று தோன்றிய
ஒரு விடுமுறை நாளின் நண்பகல் பொழுதில்
அவளை சந்தித்தேன்.
அலை அலையாக அடுக்கி வைத்திருந்த
திரை சுருள்களின் நடுவில் இருந்து வெளி வந்தாள்.
அளவையும் நிறத்தையும் கேட்டு
அதன்படி கத்தரித்துக் கொடுத்தாள்.
வாங்கின பணத்துக்கு ரசீது எழுதிக் கொடுத்தாள்.
கடையை விட்டு இறங்கி நடக்க ஆரம்பித்தபோது
ஞாபகம் வந்தது போல் கைதட்டி அழைத்தாள்.
என் ரசீதைக் கேட்டு வாங்கி மேஜை மேல் விரித்தாள்.
பேனாவை எடுத்துக் கொடுத்து
அதில் என் பெயர், முகவரி, தொலைபேசி எண்ணை
எழுத சொன்னாள்.
நானே எழுதி நானே எடுத்துக் கொண்டு போக வேண்டிய
அவசியம் என்ன என்று வாதிட்டுப் பார்த்தேன்.
அவள் கேட்கவில்லை.
"முதலாளி திட்டுவார். நீங்கள் எழுதுங்கள்"
என்று வற்புறுத்தி எழுத வைத்தாள்.
அப்புறம் நிம்மதியாக திரைகளுக்கு நடுவே போய்
உட்கார்ந்து கொண்டாள்.
நான் ஜன்னல்களை திரை கொண்டு மூடி விட்டு
விட்டுப் போன பின்கோடு எண்ணை
ரசீதில் நிரப்பி அதை மடித்து பத்திரப்படுத்தி விட்டு
டிவி போட்டுப் படுத்துக் கொண்டேன்.
(c) veenaapponavan@yahoo.com
வீட்டை இருட்டாக்கி விட வேண்டும்
என்று தோன்றிய
ஒரு விடுமுறை நாளின் நண்பகல் பொழுதில்
அவளை சந்தித்தேன்.
அலை அலையாக அடுக்கி வைத்திருந்த
திரை சுருள்களின் நடுவில் இருந்து வெளி வந்தாள்.
அளவையும் நிறத்தையும் கேட்டு
அதன்படி கத்தரித்துக் கொடுத்தாள்.
வாங்கின பணத்துக்கு ரசீது எழுதிக் கொடுத்தாள்.
கடையை விட்டு இறங்கி நடக்க ஆரம்பித்தபோது
ஞாபகம் வந்தது போல் கைதட்டி அழைத்தாள்.
என் ரசீதைக் கேட்டு வாங்கி மேஜை மேல் விரித்தாள்.
பேனாவை எடுத்துக் கொடுத்து
அதில் என் பெயர், முகவரி, தொலைபேசி எண்ணை
எழுத சொன்னாள்.
நானே எழுதி நானே எடுத்துக் கொண்டு போக வேண்டிய
அவசியம் என்ன என்று வாதிட்டுப் பார்த்தேன்.
அவள் கேட்கவில்லை.
"முதலாளி திட்டுவார். நீங்கள் எழுதுங்கள்"
என்று வற்புறுத்தி எழுத வைத்தாள்.
அப்புறம் நிம்மதியாக திரைகளுக்கு நடுவே போய்
உட்கார்ந்து கொண்டாள்.
நான் ஜன்னல்களை திரை கொண்டு மூடி விட்டு
விட்டுப் போன பின்கோடு எண்ணை
ரசீதில் நிரப்பி அதை மடித்து பத்திரப்படுத்தி விட்டு
டிவி போட்டுப் படுத்துக் கொண்டேன்.
(c) veenaapponavan@yahoo.com
Wednesday, October 08, 2008
வீடுகள் உள்ள திசை
அதிகாலை
நடைப்பயிற்சி செய்யும் வேளையில்
என்னை நிறுத்தி
'எந்தத் திசையில் வீடுகள் இருக்கின்றன?'
என்று கேட்டான்
குடுகுடுப்பைக்காரன்.
(c) veenaapponavan@yahoo.com
நடைப்பயிற்சி செய்யும் வேளையில்
என்னை நிறுத்தி
'எந்தத் திசையில் வீடுகள் இருக்கின்றன?'
என்று கேட்டான்
குடுகுடுப்பைக்காரன்.
(c) veenaapponavan@yahoo.com
துணிப் பை
வாசலில் கட்டித் தொங்க விட்டுள்ள
துணிப் பையில்
காலை 6 மணிக்கும்
மாலை 3 மணிக்கும்
தவறாமல் பால் சுரக்கிறது தினமும்.
(c) veenaapponavan@yahoo.com
துணிப் பையில்
காலை 6 மணிக்கும்
மாலை 3 மணிக்கும்
தவறாமல் பால் சுரக்கிறது தினமும்.
(c) veenaapponavan@yahoo.com
Subscribe to:
Posts (Atom)