விளையாடிக் கொண்டிருந்த
கீழ்வீட்டுக் குழந்தையின் கையில்
புது தாயத்து மின்னியது.
என்ன விஷயம் என்று கேட்டேன்
அவள் அப்பாவிடம்.
ஊரில் இருந்த
அவர் மனைவியின் தங்கை
காமாலையில் இறந்து போய் விட்டாளாம்.
அவளுக்கு இந்தக் குழந்தை மேல்
ரொம்ப பிரியமாம்.
ஊருக்குப் போனால் இரண்டு பேரும்
எப்போதும் சேர்ந்தே இருப்பார்களாம்.
குழந்தையைக் குளிப்பாட்டுவாளாம்.
இடுப்பில் வைத்துக் கொண்டு
ஊர் முழுக்க சுற்றி வருவாளாம்.
அநியாயமாக இறந்து விட்டாள் பாவம்.
தாயத்து பற்றி ஒன்றும் சொல்லவில்லையே என்று
நினைத்துக் கொண்டே மேலே வந்தேன்.
சொல்லி விட்ட மாதிரியும் இருந்தது.
அதோடு விட்டு விட்டேன்.
(c) veenaapponavan@yahoo.com
Saturday, December 20, 2008
மேஜிக்
மேடையில் ஒருவனை
மேஜை மேல் படுக்க வைத்து
இரண்டு துண்டாக வெட்டினார்
மேஜிக் நிபுணர்.
அப்புறம்
மேடையிலேயே மாரடைத்து
மயங்கி விழுந்தார்.
பார்வையாளராக இருந்த
மருத்துவர் மேடை ஏறினார்.
வினோத விளக்குகளின் ஒளியில்
நிபுணரின் மரணத்தை உறுதி செய்தார்.
அந்த மேஜையை
ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே
கீழிறங்கினார்.
(c) veenaapponavan@yahoo.com
மேஜை மேல் படுக்க வைத்து
இரண்டு துண்டாக வெட்டினார்
மேஜிக் நிபுணர்.
அப்புறம்
மேடையிலேயே மாரடைத்து
மயங்கி விழுந்தார்.
பார்வையாளராக இருந்த
மருத்துவர் மேடை ஏறினார்.
வினோத விளக்குகளின் ஒளியில்
நிபுணரின் மரணத்தை உறுதி செய்தார்.
அந்த மேஜையை
ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே
கீழிறங்கினார்.
(c) veenaapponavan@yahoo.com
நாய் பொம்மை
1
வரிசையாக
அடுக்கி வைக்கப்பட்டிருந்த
நாய் பொம்மைகளில்
குழந்தை விளையாடி விட்டு
வைத்துச் சென்ற
பொம்மையின் முகத்தில் மட்டும்
கூடுதல் சிரிப்பு.
2
தன் பெயரின் முதல் எழுத்தை
கழுத்தில் மாட்டிய பொம்மையை
எடுத்து வைத்துக் கொண்டு
தன் காதலன் பெயருக்கான பொம்மையை
ஆவலுடன் தேடுகிறாள் காதலி.
3
பொம்மை வாங்க இயலாத ஒருவன்
தன் குழந்தைக்குச் சொல்ல ஒரு
நாய்க் கதையை உருவாக்கிக் கொண்டு
நகர்கிறான் கடையை விட்டு.
(c) veenaapponavan@yahoo.com
வரிசையாக
அடுக்கி வைக்கப்பட்டிருந்த
நாய் பொம்மைகளில்
குழந்தை விளையாடி விட்டு
வைத்துச் சென்ற
பொம்மையின் முகத்தில் மட்டும்
கூடுதல் சிரிப்பு.
2
தன் பெயரின் முதல் எழுத்தை
கழுத்தில் மாட்டிய பொம்மையை
எடுத்து வைத்துக் கொண்டு
தன் காதலன் பெயருக்கான பொம்மையை
ஆவலுடன் தேடுகிறாள் காதலி.
3
பொம்மை வாங்க இயலாத ஒருவன்
தன் குழந்தைக்குச் சொல்ல ஒரு
நாய்க் கதையை உருவாக்கிக் கொண்டு
நகர்கிறான் கடையை விட்டு.
(c) veenaapponavan@yahoo.com
Subscribe to:
Posts (Atom)