Friday, February 27, 2009

தயங்கி தயங்கி

அம்மாவின் கை பிடித்து
மெதுவாகப் படி இறங்குகிறது
குழந்தை.
சீராகப் போய்க் கொண்டிருந்த
காலம்
சற்று தயங்கித் தயங்கி
முன்னகர்கிறது.

(c) veenaapponavan@yahoo.com

4 comments:

நட்புடன் ஜமால் said...

அழகான வரிகள் ...

Anonymous said...

உஙகளுக்கு நல்ல மனசு. சிக்கலே இல்லாத மொழி. அதிகம் பேச மாட்டீர்கள் என நினைக்கிறேன். அவசரமே இல்லாத வாழ்க்கை, குழப்பமே இல்லாத பார்வை,
வாழ்த்துக்கள்.

kv said...

நினைவுத் தாரின்
கறுப்பு மறைய மறைய
நிறைய வாகனங்கள்
வீதியை மறைத்தன
குழந்தை ஒன்று தத்தித்தத்தி
வீதி கடக்க
அத்தனை வேகங்களும் செத்துப் போயின
கலாப்ரியாவின் கவிதை நினைவுக்கு வருகிறது.

Gokul said...

இதை படிக்கும்போது அமைதியாக இருக்கிறது அல்லது இதை அமைதியாக படிக்க முடிகிறது.