Friday, February 27, 2009

உன் வார்த்தை

கையில் பிடித்த மீன் போல
துள்ளுகிறது உன் வார்த்தை.
சில சமயம்
கை நழுவி
கடலில் கலந்து விடுகிறது.
சில சமயம்
என் கூடையில் சேர்ந்து
செத்துப் போகிறது.

(c) veenaapponavan@yahoo.com

3 comments:

மண்குதிரை said...

//சில சமயம்
என் கூடையில் சேர்ந்து
செத்துப் போகிறது.//

உணர்கிறேன்.

Krishnan said...

Marvellous..ever slithery words, slippery as an eel.

சேரல் said...

அருமை!

-ப்ரியமுடன்
சேரல்