முட்டாள்கள் தினத்தன்று காலை
தயங்காமல் உன்னிடம்
என் காதலைச் சொன்னேன்.
'நானே சொல்லலாம் என்றிருந்தேன்' என்றாய்.
'இன்று ஏப்ரல் ஒன்று' என்ற வாக்கியம்
என் காதல் பேச்சுக்குப் பின்னால்
கத்தியைப் போல்
மறைத்து வைக்கப்பட்டிருந்தது.
'எனக்கும் தெரியும் இன்று ஏப்ரல் ஒன்று' என்ற
வாக்கியத்தின் பின்னால் மறைந்து கொண்டு
நீயும் காதல் பேசினாய்.
இந்த உரையாடலின் ஒரு பகுதி
என்றாவது நம் கனவில் வரக்கூடும்,
புதிய திரைப்படத்தின்
ட்ரெயிலர் காட்சியைப் போல.
(c) veenaapponavan@yahoo.com
Thursday, April 02, 2009
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
ரசித்தேன்.
-ப்ரியமுடன்
சேரல்
'//இன்று ஏப்ரல் ஒன்று' என்ற வாக்கியம்
என் காதல் பேச்சுக்குப் பின்னால்
கத்தியைப் போல்//
//புதிய திரைப்படத்தின்
ட்ரெயிலர் காட்சியைப் போல.//
நல்ல உவமை. ரசித்தேன்.
கொஞ்சம் வித்தியாசமான கவிதை உங்களிடமிருந்து.
அனுஜன்யா
Thanks, Cheral, Mankuthirai, Anujanya.
@Anujanya - Amam. Enakke appadithaan thonichchi ezhudhum podhu.
Post a Comment