இணைப்புகள் எல்லாம்
உபயோகத்தில் உள்ளதாக
அறிவித்தவளின் குரல்
மிகவும் மெல்லிசாய்க்
கேட்டது.
ஒருவேளை
துணி மடித்து வைத்தவாறே
பேசுகிறாளோ என்னவோ;
நான் அழைத்த எண்ணில்
இருப்பவளைப் போலவே.
(c) veenaapponavan@yahoo.com
Thursday, April 09, 2009
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
இந்த வாழ்வு தான் எவ்வளவு ரசனை மிக்கது, பதிவு செய்த குரல் துணி மடித்துக் கொண்டே பேசுகிறது, இந்த உலகை அனுபவிக்க, கற்ற பெற்ற எல்லா அறிவையும் துறந்து குழந்தையாக மாற வேண்டுமென தோன்றுகிறது.
தங்களின் அகி, ஒரு இரவில் ( ) மழை பெய்தது தொகுப்புகளையெல்லாம் வாசித்திருக்கிறேன். அப்போதெல்லாம் மனதை லேசாய் பஞ்சென மிதக்கச் செய்து விட்டிருக்கிறீர்கள்
சமீபத்தில் கூட அந்த வாஷ் பேசின் கவிதை, ஐயோ,,,,,,
இதையெல்லாம் தங்களுடன் பகிர்ந்து கொள்ள முடிகிறது என்பதே மகிழ்ச்சியாக இருக்கிறது.
முகுந்த் முத்திரை. எப்படி உங்களுக்கு மட்டும் சாத்தியமாகிறது! முதலில் புன்னகை வரவழைத்தாலும், நம் மனநிலைப்படி மற்ற உணர்வுகளையும் இழுக்கும் நல்ல கவிதை.
அனுஜன்யா
அது எப்படி நீங்கள் அழைத்தவள் துணி மடித்து வைத்தவாறு இருப்பாள் எனச் சொல்கிறீர்கள்...
ம்ஹும்... கவிதை எனக்குப் பிடிக்கவில்லை :(
உங்க கவித மாதிரி இல்லைங்க. கடைசி வரி 'ப்ச்' :|
அன்பின் முகுந்த்
எனக்குப் பிடிக்கிறது - எதிர்பார்ப்பவளின் நினைவின் தாக்கம் இவளீடமும் - நல்வாழ்த்துகள்
/-- கிண்ணத்தில் அளந்து
தட்டில் கவிழ்க்கப்பட்ட
அளவுச் சாப்பாட்டின்
வட்ட விளிம்பில்
பிரதிபலிக்கிறது
என் தனிமை.--/
நல்ல கவிதைகள்... தொடர்ந்து எழுதுங்கள். வலைச்சரம் மாதங்கி மூலம் உங்களுடைய கவிதைகளை வாசிக்க நேர்ந்தது மகிழ்ச்சி.
நல்லா இருக்குங்க கவிதை ...துணி யார் வேணா மடிக்கலாம் தான் அது அறிவிப்பாளரா இருந்தா என்ன? அழைச்சவங்களா இருந்தா என்ன? வாசிக்கும் போது வரிகள் புன்னகையை வரவழைக்கின்றன. வலைச்சரம் மாதங்கி மூலம் இங்கே படிக்க கிடைத்தது உங்கள் வலைப்பூ .
Post a Comment