'வாழ்க்கை எப்படிப் போகிறது'
என்று கேட்டான்
ரொம்ப நாள் கழித்து
சாட்டில் வந்த நண்பன்.
முன் தினம்
சரவணபவனில்
பெரிய தோசை வேண்டும்
என்று அடம் பிடித்து வாங்கி
சாப்பிட முடியாமல்
முழித்துக் கொண்டிருந்த
சிறுமியைப் பற்றி சொன்னேன்.
'அப்புறம் பார்க்கலாம்' என்று
மறைந்து போனான்.
என்னிடம் பெரிதாக
எதையேனும்
எதிர்பார்க்கிறார்களோ.
(c) veenaapponavan@yahoo.com
Friday, May 01, 2009
Subscribe to:
Post Comments (Atom)
15 comments:
நேற்று சாட்டில் வந்த நண்பன்?!
நல்லா இருக்கு முகுந்த. ரசித்தேன்.
நிறையப் பேருக்கு வாழ்க்கையை வாழத் தெரியவில்லை முகுந்த்.
"Happiness is found along the road and not at the end" என்பது புரிந்தால் வாழ்வெல்லாம் ஆனந்தமே.
எனது முந்தைய பின்னூட்டத்திற்கு பதில் மாதிரி இருக்கு. எனி வே, பேக் டு ஃபார்ம். வாழ்த்துக்கள் சார்! வடகரை அண்ணன்மாரின் பின்னூட்டத்தை அப்படியே வழிமொழிகிறேன்.
நல்ல கவிதை! புன்னகையை வரவழைத்தது அந்தச் சிறுமியின் செயல். யோசிக்கச் செய்தது உங்கள் கேள்வி.
-ப்ரியமுடன்
சேரல்
ரசிக்க நிறைய விஷயங்கள் நம்மைச் சுற்றி நடக்க.. தன் வாழ்க்கை ஒன்றின் முன்னேற்றம் மட்டுமே ரசிக்கத்தக்கதாக நினைப்பவர்களுக்கு உங்கள் பதில் வேடிக்கையாகத்தானிருந்திருக்கும்.
நீங்கள் கொடுத்து வைத்தவர் முகுந்த்... என்னைப்போலவே!
புதுசா இருக்கு. :) ஆனா நல்லா இருக்கு. :))
அழகிய வார்ப்பு!!
கவிதை மிகவும் பிடித்திருக்கிறது.
That's a good one..
I have added it to the படித்தது / பிடித்தது series in my website.
http://www.writercsk.com/2009/05/36.html
Azhagu!
அக்மார்க் முகுந்த் டச் :)
அனுஜன்யா
நன்று. :-)
அழகு .. அழகு...
வாவ்.. :)
அப்டியே வேலன் அண்ணாச்சிக்கு ஒரு ரிப்பீட்டுப் போட்டுக்கிறேன் சாமி.. :)
Wow! Really liked this one!
Post a Comment