Monday, May 11, 2009

தேடப்படும் தீவிரவாதி

சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தின்
மெட்டல் டிடெக்டர் வாயிலுக்குள்
வலது கால் வைத்து உள்ளே நுழைந்தேன்.
நூற்றுக்கணக்கானவர்கள்
கடந்து கொண்டிருந்த இடத்தில்
என்னை மட்டும் சோதனைக்கு அழைத்தாள்
போலீஸ்காரி.
பையையும், பயணச்சீட்டையும்,
அடையாள அட்டையையும் சோதித்து
விவரங்களைப் பதிவு செய்து கொண்டு
விடுவித்தாள் என்னை.
அடுத்த வாரம் அதே மாதிரி
ரயில் நிலையத்துக்குள் நுழைந்த போது
நானாகவே என் பையை
அவளிடம் நீட்டினேன்.
என்னை அடையாளம் கண்டு கொண்டவள்
புன்னகைத்து 'போ' என்று
கை காட்டி விட்டாள்.
தேடப்படும் தீவிரவாதிகளின்
பட்டியலில் இருந்து
என் பெயர் நீக்கப்பட்ட சந்தோஷத்தில்
மூன்றாவது நடைமேடையை நோக்கி
உற்சாகமாக நடந்தேன்.

(c) veenaapponavan@yahoo.com

9 comments:

மண்குதிரை said...

வாவ்,

முகுந்த்,

என்ன ஒரு ஆச்சரியம் இதே போன்று எனக்கு நிகழ்ந்ததை ஒரு வாரமாக கவிதையாக முயற்சி செய்து கொண்டிருந்தேன்.

வாய்ப்பே இல்லை.

சேரல் said...

ஒரு சிறுகதைக்கான கரு, கவிதையாகப் பிறந்திருக்கிறது.

-ப்ரியமுடன்
சேரல்

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

இந்தக் கவிதை எனக்குப் பிடித்திருக்கிறது.

அனுஜன்யா said...

ரயில்களும், ரயில் நிலையங்களும் உங்களை எவ்வளவு வசிகரிக்கின்றனவோ , போலவே எனக்கும் அவை பற்றிய உங்கள் கவிதைகளும். நல்லா இருக்கு முகுந்த்.

அனுஜன்யா

வடகரை வேலன் said...

நல்லா இருக்கு முகுந்த். இந்த அனுபவத்துக்கு எல்லோரும் ஆட்பட்டிருந்தாலும் அதைக் கவிதையா வடிச்சது அற்புதம்.

yathra said...

கவிதை பிடிச்சிருக்குங்க.

Madhuri said...

my god you really challenged my tamil skills with this one :(

i liked it finally, i am relieved u r no longer on the wanted list :(

Victor said...

Nice one!

Saravana Kumar MSK said...

அட்டகாசம்.. கலக்கல்.. உங்களால் மட்டும் எப்படி இப்படியெல்லாம் வாழவும் ரசிக்கவும் எழுதவும் முடிகிறது!!!!