மாரியம்மன் கோயில் வேப்பமரம்
எங்கள் வீட்டுப் பக்கமாக
சாய்ந்து வளர்ந்திருக்கிறது.
இலை, பூ பறிக்க வேண்டுவோர்
வீட்டு கேட்டை அசைத்து
குரல் கொடுத்துவிட்டு
மாடிப்படி ஏறுகிறார்கள்.
குழந்தைகளுக்கு
அவர்கள் கை காட்டிய பூக்களைப்
பறித்துக் கொடுத்தேன் நேற்று.
அதை மாரியம்மனிடம் காட்டி
அவள் அருளை
அதில் ஏற்றிக் கொண்டு போனார்கள்.
களை ஏறி
ஒளி வீசிக் கொண்டிருந்தாள் மாரி.
(c) veenaapponavan@yahoo.com
Thursday, May 21, 2009
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
ரசிக்கிறேன்
-ப்ரியமுடன்
சேரல்
முகுந்த் நாகராஜன். 139 கவிதைகள் அகி உங்களுடையதுதானே? மிக அருமை, குரோம்பேட்டை என்றுதானே நினைத்தேன். அகி புத்தகத்தை சில வருடங்கள் முன் தங்கள் வீட்டிற்கு வந்து வாங்கிவந்தார் என் கணவர் எனக்காக. மாரியம்மன் வேப்பமரத்தில் உங்கள் நடை அடையாளம் காட்டியது. [நானும் 8 -9 ஆண்டுகள் குரோம்பேட்டையில் இருந்திருக்கிறேன்] உங்கள் பக்கத்தை பார்க்க நேர்ந்ததில் மகிழ்ச்சியுடன்
உமா.
Thanks, Cheral and Uma.
@Uma - Yes. I am from Chromepettai.
Nice, felt good :) a little different from ur usual?
/அவள் அருளை
அதில் ஏற்றிக் கொண்டு போனார்கள்.
களை ஏறி
ஒளி வீசிக் கொண்டிருந்தாள் மாரி./ - Ithu romba nalla irukku.
Post a Comment