Friday, May 29, 2009

விளம்பர இடைவேளைக்கு நடுவே

பித்துப் பிடித்த மனநிலையின்
உச்சத்தில் பிறந்த
கவிதைகளின் தொகுப்பு என
கவிஞன் சொல்லி இருந்தான்
தன் முன்னுரையில்.
இடம், தேதி குறிப்பிட்டு
முடித்திருந்த
அந்த முன்னுரைக்குக் கீழே
கவிதைகள் வெளியான
இதழ்களின் பெயர்களும்,
புத்தகத் தயாரிப்பில்
உறுதுணையாக இருந்த
நண்பர்களின் பெயர்களும்
பட்டியலிடப்பட்டு இருந்தன.
ஒழுங்கு கலைந்த மனத்தின்
பேச்சாக விரிந்த
கவிதைகளுக்கு நடுவே
புத்தகத்தின் பெயரும்,
பக்க எண்ணும்,
கவிஞன் பெயரும்
ஓயாமல் வந்து கொண்டிருந்தன
விளம்பர இடைவேளைகளைப் போல.

(C) veenaapponavan@yahoo.com

11 comments:

வெங்கிராஜா said...

கொஞ்சம் இடைவெளி விட்டு மீண்டும் பெய்த அடைமழையின் தாக்கம்... மீண்டும் உங்கள் சாயலில் உதட்டோரப் புன்னகை கக்கச்செய்யும் கவிதை! இயல்பான ஜீனியஸ்!

Gowripriya said...

அருமை... அந்தக் கவிதைப் புத்தகம் மனக்கண் முன் வந்து போனது

D.R.Ashok said...

ம்ம்ம்ம்

Nundhaa said...

அபாரம்

kartin said...

நச்.... அதே டச்!!

yathra said...

அழகாச் சொல்லியிருக்கீங்க. எவ்ளோ வித்தியாசப்படுத்திக்கிட்டாலும் சில சட்டகங்களை நம்மால உதற முடியல இல்ல.

அனுஜன்யா said...

வாவ், அட்டகாசம். இன்னமும் புன்சிரிப்பு என் உதட்டில்

அனுஜன்யா

Devi said...

wow its very nice kavidhai. keep it up. and continue your ginues poem. and i like your all poem.

Saravana Kumar MSK said...

கலக்கல் :)

Kavingan said...

மெல்லிய புன்னகையை மலர்த்துகிறது
உங்கள் வரிகளில் இருக்கும் எள்ளல்
வாழ்த்துக்கள்

வண்ணத்துபூச்சியார் said...

அருமை