Wednesday, October 28, 2009

காற்றில்...

கைத்தொலைபேசியில்
அவள் அழைப்பு
மெளனமாக அதிரும்போதெல்லாம்
மின்விசிறியின் காற்றில்
அசைந்து ஒலி எழுப்புகிறது
ஓயாமல் பேசும் அவள்
பரிசளித்த மணிக்கொத்து.
(c) veenaapponavan@yahoo.com

11 comments:

D.R.Ashok said...

:)

நேசமித்ரன் said...

நல்ல கவிதை கூர்ந்த அவதானம்

Maniz said...

Superb Kavithai :)

வடகரை வேலன் said...

நல்லா இருக்கு முகுந்த். எங்கே அனேக நாட்களாகக் காணவில்லை?

ராகவன் said...

அருமையான கவிதை.
வாழ்த்துக்கள்

அன்புடன்
ராகவன்

அன்புடன் அருணா said...

சூப்பர்! பூங்கொத்து!

arun said...

cute :)

கல்யாணி சுரேஷ் said...

கை பேசியின் மணியோசைக்கு பதிலாக பரிசாக வந்த மணிகொத்து ஒலி எழுப்புகிறதோ? நல்ல கவிதை.

பா.ராஜாராம் said...

தாமத வருகை...எல்லா கவிதைகளையும் வாசித்துவிட்டேன்,முகுந்த்.

" !!!!!!!!!!!!!!!!!!......

பா.ராஜாராம் said...

உங்களின் ஒரு கவிதையை என் தளத்திற்கு எடுத்துட்டு போறேன் முகுந்த்."என்னை கவர்ந்த வரிகளுக்காக".நன்றி!

Pradeep said...

கவிதைகள் அனைத்தும் அருமை.. இன்னும் நிறைய எழுத வாழ்த்துகள்